அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் பக்தருக்கு விதைக்கப்படும் பிரதேச வாதம்!!!

வவுனியாவில் மூன்று அழகிய கோபுரங்களுடன் பார்ப்போர் மனதை கவரும் சிவன் ஆலயமே கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி ஆலயம் இதை குட்டி திருவெண்ணாமலை என்று கூட கூறலாம்.
ஆனால் ஆலயங்கள் இந்துக்களுக்கு இன மத காலாச்சாரங்களை போதிக்க வேண்டிய ஒன்றல்லவா? ஆனால் இந்த ஆலயத்தில் பிரதேச வாதம் வேர் விட ஆரம்பிக்கிறது!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த ஆலயம் உள்ள கிராம சிறுமி ஒருவர் அதுவும் இந்து மதத்தை தழுவிய ஒருவர் குழந்தை பருவத்தில் இருந்து அவரது தாய் தந்தை இவர்தான் உன் சாமி என தினமும் போய் தரிசிக்கும் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் covid கட்டுப்பாடுகள் காரணமாக தடைப்பட்ட தனது பூப்புனித நீராட்டு விழா விடியோவில் தனது மத குருவிடம் ஆசீர்வாதம் வாங்கும் காட்சி குறித்த ஆலயத்தில் வெளிப்பகுதியில் அதன் அழகிய தோற்றத்துடன் பதிவு செய்ய வேண்டும் என்ற கனவை நனவாக்க அலங்கரித்த மேனியாக சென்ற போது குறித்த ஆசிர்வாத காட்சிக்கு மத குருவும் தயாரானபோது குறித்த நிர்வாகம் விடியோ உள்ளேயே வெளியே எடுக்க முடியாது என கூறி வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பதிவானது.
பொது இடங்களில் உள்ள சட்டங்கள் தோல் நிறம் ‘வசதி ‘உறவுமுறை ‘பிரதேசம் என மாறுபடாமல் அனைவருக்கும் ஒரே நடைமுறை இருக்க வேண்டிய இடமே என்பதில் மாற்று இல்லை

அன்று எடுக்க மேடியாது என்று கூறிய நிர்வாகம் தமது உறவு மற்றும் யாழ் வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண் ஆலய நிர்வாகத்தின் உறவுமுறை பணபலம் உடையவர் இவருக்கு விடியோ எடுக்க அனுமதி வழங்கப்பட்டது இவ்வாறான சம்பவங்களை பார்க்கும் போது பிரதேச வாதம் மக்களில் பாகுபாடு பார்த்தல் போன்ற விடையங்கள் இவ்வாறான ஆலயங்களில் இருந்து தான் தோற்றம் பெறுகிறது என குறித்த கிராம மக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.இது இந்து காலாச்சார உத்தியோகத்தர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கவனத்துக்கு!!