அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமார வின் கணேமுல்ல கந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (4) சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தனர்.
இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட உதவுவதுடன், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவும் உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த பிரியந்தவின் இரண்டு மகன்களும், மனைவி, சகோதரன் உள்ளிட்ட உறவினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாளை (06) இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. சடலத்தை நாட்டுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட பிரியந்தவின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த சந்தர்பத்தில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு தனது இரங்கலை பகிர்ந்து கொண்டுள்ளார்.