அமைச்சுக்களின் தீடீர் மாற்றம்!

இன்றைய தினம் சில அமைச்சர்களின் பொறுப்புக்களில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏழு அமைச்சு பதவிகளில் குறித்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, வெளியுறவு அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

வெகுசன ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெரும பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடன், போக்குவரத்து அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மின் சக்தி அமைச்சராக காமினி லொகுகே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.என அறிய முடிகிறது.