அம்மாவின் பிறந்தநாளை தனிமையில் கொண்டாடிய த்ரிஷா!!!

1999ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்று பிரபலமானவர். அதே வருடம் பிரசாந்தின், ஜோடி படத்தில் சிம்ரனுடன் சுற்றும் தோழிகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆனவர். பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என ஆரம்பித்த இவர் சினிமா க்ராப் உச்சம் தொட்டது. 2000 முதல் 2010 வரை அசைக்க முடியாத நடிகையாக இருந்தது இவர் மார்க்கெட்.
20 வருடங்களாக ஹீரோக்களே மார்க்கெட் இழக்கும் இன்றைய சூழலில் பிஸி ஹீரோயினாக த்ரிஷா சூப்பராக வலம் வருகிறார். தனது பல பேட்டிகளில் திரிஷா சொல்வது அவரின் பக்கபலம் அம்மா உமா கிருஷ்ணன் என்பது தான்.

சமீபத்தில் தனது அம்மாவுக்கு இரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிறந்தநாள் கேக்குடன் அசத்தியுள்ளார் திரிஷா. இவரே கேக் தயார் செய்துள்ளார், இருவரும் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.