வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபடும் போது வீட்டு உரிமையாளர் அவதானித்ததை தொடர்ந்து உரிமையாளரை தாக்கி கழுத்தை நெரித்து ஒருவர் பிடித்து வைத்திருக்க மற்றையவர் அவரை தாக்கிய பொழுது வீட்டில் இருந்த உரிமையாளரின் மருமகன் அதனை தடுத்து கைகலப்பில் ஈடுபட்ட வேளையில் அயலவர்கள் ஓடி வரவும் அதனிடையில் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்
எனினும் ஒருவர் மாட்டிக்கொண்டார் இதனை தொடர்ந்து வவுனியா பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கொள்ளையர்களில் ஒருவரை கைது செய்து கொண்டு சென்றனர்
இதேவேளை 50000ரூபா பெறுமதியான பொருட்களை ஏனைய கொள்ளையர்கள் கொண்டு சென்றுள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் குறித்த கொள்ளையர் வவுனியாவில் இயங்கி வரும் பிரபல காமென்ட் ஹைதராமணி நிறுவனத்தின் டீசேட் அணிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது