iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை டெவெலொப் செய்பவர்கள் அவற்றினை ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்பது தெரிந்ததே.
இவற்றில் இலவசமாக பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களும், கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.
கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய அப்பிளிக்கேஷன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட தரகுப் பணத்தினை டெவெலொப்பர்களிடமிருந்து பெற்றுவருகின்றது.
எனினும் இத் தரகுப் பணத்தின் சதவீதத்தினை குறைப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிலிருந்து இம் மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டிய டெவெலொப்பர்கள் அடுத்த வருடம் குறித்த சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுபோன்று புதிதாக இணையும் டெவெலொப்பர்கள் ஒரு மில்லியன் டொலர் வருமானம் ஈட்டினால் ஒரு நிலையான தரகுப் பணம் அறவீடு செய்யப்படும்.
தவிர ஒரு மில்லியன் டொலரை எட்ட தவறும் டெவெலொப்பர்களிடமிருந்து 15 சதவீதம் தரகுப் பணமாக அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் தற்போது 30 சதவீதம் வரை தரகுப் பணம் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.