ஆரம்பித்ததா?மிரட்டல் அரசியல்!! விடியோ ஆதாரம் உள்ளே

வவுனியா தரணிக்குளம் பகுதியில் சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரை ஈபிடிபி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அவரது சகாக்களும் வீடு புகுந்து மிரட்டியதாக குறித்த நபர் எமது செய்தியாளரை தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

தரணிக்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் மஞ்சுளா என்பவர் ஈபிடிபி கட்சியில் ஏற்கனவே ஆதரவாளராக இருந்தவர் என்றும் ஈபிடிபி கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக செயற்பட்ட துஸ்யந்தன் விக்ரர் ராஜ் தலைமையில் ஆன குழுவினர் வவுனியாவில் சட்ட விரோத செயற்பாடுகள் கட்சியின் பெயரை பாவித்து நடைபெறுவதை தலைமைக்கு பல முறை சுட்டிக்காட்டியும் அதற்கு நடவடிக்கை எடுக்க தலைமை இளுத்தடிப்பு செய்ததை அடுத்து  “அகில இலங்கை இளைஞர் முண்ணணி”என்ற பெயரில் தனிகட்சி அமைத்து இலங்கை சுதந்திர கட்சியுடன் பங்காளிகளாக இந்த உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது யாவரும் அறிந்ததே! இந்த நிலையில் சுதந்திர கட்சியின் வவுனியா தரனிக்குளம் வேட்பாளர் மஞ்சுளா அவர்களின் சமூகசேவை மற்றும் மக்கள் அதரவை நன்கறிந்த வவுனியா ஈபிடிபியினர் தேர்தலில் இருந்து விலகுமாறு நேரடியாக பா.உ திலீபன் அவர்களும் அவரது சகாக்களும் நேரடியாக மிரட்டியதாக அறிய முடிகிறது இது குறித்து சமூக அர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் ஈபிடிபியின் கொள்கை வவுனியாவில் தடம்புரண்டதா? இதுவா உங்கள் செய்வோம் செய்விப்போம் என்ற மகுட வாக்கியத்தின் வெளிப்பாடு என கருத்து தெரிவித்துள்ளனர்.