முல்லைத்தீவில் மாவட்டத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி 237 வீரர்களில் ஆறு தங்கங்களை சுவீகரித்த இளம் வீரர்கள்
அதாவது முல்லைத்தீவு மாவட்டம், குமுழமுனை கிராமத்தின் மைந்தன் கந்தசாமி பத்மநாதனின் பூரண நிதிப் பங்களிப்பில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி ஒன்று நேற்றைய முன்தினம் காலை 7.30 மணிக்கு (31.01.2023) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முன்பாக
ஆரம்பித்து முள்ளியவளை முல்லைத்தீவு பிரதான வீதியூடாகச் சென்று முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி வழியாக அளம்பிலைச் சென்றடைந்து தொடர்ந்து அளம்பில் குமுழமுனை வீதிவழியாக குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
பெண்களுக்கான மரதன் ஓட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி வழியாக அளம்பிலைச் சென்றடைந்து தொடர்ந்து அளம்பில் குமுழமுனை வீதிவழியாக குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
இந்த மரதன் ஓட்டப் போட்டியில் 179 வீரர்களும் , 60 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற இருபாலாருக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
ஆண்கள் பிரிவில் முதலாம் இடம் ஜெ.சுபராஜ் – கொக்குத்தொடுவாய்,
இரண்டாம் இடம் எஸ்.யாழ்மைந்தன் – வள்ளுவர்புரம் விசுவமடு,
மூன்றாம் இடம் எஸ். அகிலன் தியோநகர் சிலாவத்தை
பெண்கள் பிரிவில் முதலாம் இடம் என்.கேமா – குரவயல் உடையார்கட்டு, இரண்டாம் இடம் விதுசா – கெருடமடு மன்னகண்டல், மூன்றாம் இடத்தினை
மாணிக்கபுரம் விசுவமடுவை சேர்ந்த ஏ.அபிநயா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த மரதன் ஓட்ட ஆரம்ப நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம் ) , மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி) , வைத்தியர் திரு.சுதர்சன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் விளையாட்டு உத்தியோகத்தர்கள், பொலிஸார், பெருந்திரளான மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இந்த தகவலை மாவட்ட ஊடகப்பிரிவுமாவட்ட செயலகம் முல்லைத்தீவு வெளியிட்டுள்ளது