இந்தியா – இலங்கை தொடரில் குழப்பம்.. விளையாட மறுத்து போர்க்கொடி தூக்கிய 5 வீரர்கள்.. காரணம் என்ன?

இந்தியா – இங்கிலாந்து தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் 5 வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இளம் வீரர்களை அதிகம் கொண்ட இந்திய ‘ஏ’ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன்3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறப்படுகிறது
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மும்பையில் 14 நாட்கள் பயோ பபுளில் இருந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் 28ம் தேதி இலங்கை வந்தனர். அங்கு தற்போது பபுளுக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாட இலங்கை வீரர்கள் விஸ்வா ஃபெர்னாண்டோ, லசித் எம்புள்டேனியா, லஹிரு குமாரா, அசென் பண்டாரா, கசுன் ரஞ்சிதா ஆகிய 5 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் பபுளில் இணையாமல், தங்கியிருந்த அறைகளை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்தது. அதாவது, வீரர்களின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும் என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் இதற்கு இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்னை முடியும் வரை ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில் இந்திய தொடருக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட 5 வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் கடந்த சில தொடர்களில் மிக மோசமாக உள்ளது. தற்போது இங்கிலாந்து தொடரில் பெரிய சொதப்பலில் ஈடுபட்டது. இது ஒருபுறம் இருக்க பபுள் விதிகளை மீறியதாக 3 சீனியர் வீரர்களுக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் 5 வீரர்கள் விலகியிருப்பதால் இலங்கைஅணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இந்திய இணையத்தளம் ஒன்று வெளியிட்ட பதிப்பு