இலங்கைக்கு சாபக்கேடாக அமைந்த ஆட்சியாளர் இவரா????

இன்றைய தினம் அமரர் ரணசிங்க பிரமதாச அவர்களின் 29 ம் ஆண்டு நினைவு தினம்.

ஐக்கிய தேசிய கட்சி காலத்தில் தான் இனகலவரங்கள் தொடங்கியது அதற்க்கு ஏற்றால்போல் புலிகளும் பிரமதாசவுக்கு முண்டு கொடுத்தார்கள் . அண்ணா தம்பி என்று ஆயுதம் பணங்களை வாங்கினார்கள்.

ஈழப்போர்-2 காலபகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொலைகள் தொடர்பில் உங்கள் பதில் என்ன?

தமிழர் பகுதிகளில் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து மக்களை பட்டினி போட்டு சாகடிக்க முயன்றவர் இந்த பிரேமதாச. மா, சீனி, பெற்ரோலிய பொருட்கள், சோப்பு, பால் மா, கிழங்கு, உரம் இவற்றின் விலை இப்போதைய மதிப்பில் 10000-100000 வரை தமிழர் பகுதிகளில் இருக்க காரணம் யார்?

சோப்புக்கு பதில் பனங்கொட்டை பாவித்த வரலாறு, கடாபி இனிப்புடன் பிளேன் டீ குடித்த்து, மரக்கறி எண்ணையில் வாகனம் ஓடியது எல்லாம் பிரேமதாச காலத்தில் தானே அறிமுகமாகியது.

எந்தவித சர்வதேச சட்டங்களையும் மதிக்காது பாடசாலைகள், கோயில்கள், சந்தைகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் பீப்பாய் குண்டுகளை சரக்கு விமானங்களில் இருந்து வீசியது,,கொழும்பு மாநகர சபை மலசல கழிவுகளைக் கூட பீப்பாய்களில் அடைத்து தமிழர் பகுதிகளில் வீசிய அட்டூலியங்களை செய்தது இந்த பிரேமதாசதானே.

உண்மையில் இலங்கையில் தமிழின படுகொலை செய்த முதலாவது இனப்படுகொலையாளியே இந்தாள்தானே? சில முஸ்லிம்களை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழர் மீது கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகள் எத்தனை எத்தனை? இந்தாள் செய்த தமிழின படுகொலைகளில் வெகுசிலதான் இவை.

கிழக்கில் முஸ்லீம் தமிழ் பிரச்சனையை தூண்டிவிட்டதே ரணசிங்க பிரேமதாசா இன்னமும் வடுக்கல் அழியாமல் இருக்கிறது.

1990 ஜூன் –திரியாய் படுகொலை.

12 ஜூன் 1990- கல்முனை படுகொலை.

12 ஆகஸ்ட் 1990- வீரமுனை படுகொலை.

05 செப்டம்பர் 1990 வந்தாறுமுலை கம்பஸ் படுகொலை.

09 அக்டோபர் 1990- சாவகச்சேரி சந்தை படுகொலை.

பெபிரவரி 1991 மன்னர் கொண்டைச்சி படுகொலை.

20 பெபிரவரி 1991- ஏராவூர் படுகொலை.

மார்ச் 1991- மட்டகளப்பு இருதயபுர படுகொலை.

12 ஏப்பிரல் 1991- திருகோணமலை நாயன்மார்திடல் படுகொலை.

12 ஜூன் 1991- கொக்கட்டிசோலை படுகொலை.

29 ஏப்பிரல் 1992 பொலநறுவை முத்துகல் படுகொலை.

09 ஆகஸ்ட் 1192 மட்டக்களப்பு மைலாந்துறை படுகொலை.

24 அக்டோபர் 1992 மட்டக்களப்பு பலியாவெட்டை படுகொலை.

02 ஜனவரி 1993- கிளாலி( கேரதீவு-சங்குபிட்டி படகு) படுகொலை.

17 பெப்பிரவரி 1993- மட்டக்களப்பு வண்ணாத்தியாறு படுகொலை.

இவற்றுக்கு மகுடம் வைதாற் போன்று 1983 ஜூலை கலவரம்.

1994ல் சந்திரிகாவின் அமோக வெற்றிக்கு காரணமே பிரேமதாசவின் இந்த அலங்கோல ஆட்சியினாலும் அவரது மனைவி ஹேமாவின் அட்டகாசத்தினால் ஏற்பட்ட வெறுப்பு தானே?

தமிழர் அழிவுகளை வைத்து தெற்க்கில் அரசியல் செய்தவர்தான் சஜீத் பிரேமதாசாவின் அப்பா.

என்றும் தனது அப்பாவின் இறப்பை மறக்க முடியாமல் தவிக்கிறார். நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இவற்றை எல்லாம் ரணசிங்க பிரேமதாசதானே செய்தார் அவரின் மகன் இல்லையே என நீங்கள் நியாயம் கூறலாம். அது ஏற்ப்புடையது என்றால் நாமல் ராஜபக்சவைவை எப்படி உங்களால் விமர்சிக்க முடியும்?

பிரேமதாசவின் அரசில் தம்மையும் அரசாங்கத்தையும் பாதுகாத்து கொள்ள அரச சார்பு இயக்கமாக ( ஒட்டுகுழு என்கிறார்கள் அது. ) முதலில் களம் இறங்கியது யார் ??(மகாதேவா புஸ்பதோவாவின் முகநூலில் இருந்து )