இலங்கையில் தமிழ் மக்கள் உணவின்றி பரிதாபம்!!! ஏமாறும் புலம்பெயர் தேசம்!!!

கடந்த சில காலமாக சில சமூக சேவை அமைப்புக்கள் என்ற போர்வையில் உலக நாடுகளுக்கு இலங்கையில் உணவு இல்லை இலங்கை சோமாலியா பேன்று உள்ளது என காண்பித்து ஒருசிலர் தமது செந்த சுக போக வாழ்க்கைக்கு புலம் பெயர் சமூகத்தை ஏமாற்றி வருவதாக அறிய முடிகிறது.இவ்வாறு போலியான சமூக சேவை அமைப்புக்கள் ஒரு சாப்பாடு வழங்கி விட்டு புகைப்படம் எடுப்பதும் தமது செல்லப்பிராணிகளின் பிறந்தநாள் நிகழ்வுகளுக்கு உணவு பேதி வழங்குவதும் அதை முகநூலில் பதிவிட்டு எமது நாட்டின் நாளைய தலைவர்கள் உணவுக்கு அலைமோதுவது போல் அசிங்கப்படுத்துவதாக தாம் சிந்திப்பதாக வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு சில பாடசாலை மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதே வேளை இன்றைய சின்னப்புதுக்குளம் கிராம அபிவிருத்தி சங்க முகநூல் பக்கத்தை உற்று நேக்கினால் மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் மாணிக்க தாசன் அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பு தமது கிராமத்தில் ஒரு தரமற்ற சாப்பாடு மற்றும் கொப்பியை வழங்கியமையும் தாம் ஏற்பாடு செய்த மக்களுக்கு பெறுப்பு கூற வேண்டிய அமைப்பு என்ற ரீதியில் பதிவு செய்திருந்தனர் சமூக சேவை அமைப்புக்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகளே! பிரதேச செயலாளர்களே! சம்மந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களே! சம்மந்தப்பட்ட அமைப்புக்களுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? இல்லை வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் பங்கிடப்பட்டு மீதம் பணம் தான் மக்களுக்கு சென்றடைகிறதா? இது உங்கள் கவனத்திற்கு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முன் உங்கள் கடமைகளை செய்வீர்கள் என மக்கள் எதிர் பார்க்கின்ரனர்…