இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பிரமாண்டமான டிஸ்னிவேன்ட்…!!!

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிவேன்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 of the Best Disneyland Resort Attractions You've Probably Never Tried | YellowBlissRoad.com

மலேசியா மற்றும் கொரியாவின் முதலீட்டுடன் கொரிய நிறுவனமான Korea Cavitation Co வினால் இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

டிஸ்னிவேன்ட் அமைப்பதற்காக 150 ஏக்கர் காணியை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

பிரதானமாக கொரியா மற்றும் மலேசியா உட்பட நாடுகளிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி உதவி இந்த திட்டத்திற்கு பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொ.ரோ.னா வை.ர.ஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் 30 வீதம் நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொ.ரோ.னா வை.ர.ஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் இந்தியாவும் முதலீடு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம் மலேசியாவின் Genting Highlands திட்டத்திற்கு சமமானதாகும். இதில் விசேட ரயில் வீதி உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்க எதிர்பார்ககப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 300 அறைகள் கொண்ட ஹோட்டல்களையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.