வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆச்சிபுரம் எனும் கிராமத்தில் நேற்றைய தினம் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு 2000 ரூபா வழங்கும் செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் மக்கள் நீண்ட நேரமாக பணத்தினை பெறுவதற்கு அரச ஊழியர்கள் அற்று காத்திருப்பதாக குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைவாக எமது செய்தியாளர் நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்தார்.
அதன் அடிப்படையில் கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகத்தில் இருந்து பணத்தை கொண்டு வந்து பட்டதாரி பயிலுனரிடம் வழங்கி விட்டு வீடு சென்றதாக தெரியவருகிறது.இந்த இக்கட்டான சூழ் நிலையில் மக்களின் பாதுகாப்பையும் தனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு பட்டதாரி பயிலுனர் அன்ரிஜன் அல்லது பீசிஆர் பரிசோதனை செய்து தன்னை covid 19 தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின் மக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
மேற்படி கிராம வாசிகள் கருத்து தெரிவிக்கையில் மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாது பட்டதாரி பயிலுனரிடம் பெறுப்பை ஒப்படைத்து சென்றிருந்த போதும் ஜனாதிபதியால் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட ஊழியர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தன் உயிரைக் கூட துச்சமென மதித்து அதிரடியாக தன்னார்வத்துடன் சேவை செய்தமை ஜனாதிபதிக்கு கிடைத்த கௌரவம் என பலரும் பாராட்டினர்.
நாட்டின் அதிக. பணம் அரச ஊழியர்கள் சம்பளத்திற்கு செலவு செய்யப்படும் இந்த நிலையில் தமது சுய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது சேவை செய்யக்கூடிய இவ்வாறான ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொண்ட ஜனாதிபதியையும் பாராட்டினர்.
எது எவ்வாறு இருப்பினும் சிறந்த ஆளுமை மிக்க மக்கள் சேவை நாயகர்களாக பல அரசு ஊழியர்கள் வலம் வரும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஊழியர்களின் செயற்பாட்டை நினைத்து மக்கள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் பட்டதாரி பயிலுனரை அனைவரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.எமது முன்னைய பதிவில் ஒரு சில அரசு ஊழியர்கள் covid அச்சம் காரணமாக முறையான விடுமுறை இல்லாமல் வீட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டமை கருத்தில் கொள்ள வேண்டியது.