இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் பொருட்டு, அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார் இளவரசர் ஹரி.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் மதியம் 1.15 மணிக்கு ஹீத்ரோவுக்கு வந்திறங்கியுள்ளார் இளவரசர் ஹரி.
சினோஸ், ஜாக்கெட் மற்றும் கறுப்பு மாஸ்க் அணிந்திருந்த அவரை விமானத்தில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சந்தித்து,
பின்னர் ஒரு கருப்பு ரேஞ்ச் ரோவரில் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இளவரசர் ஹரியின் வருகையை முன்னிட்டு, பொலிஸ் வாகனங்களும் குவிக்கப்பட்டிருந்தன.
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு முன்னர் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் கென்சிங்டன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும், அங்கு அவர் நாட்டிங்ஹாம் மாளிகையில் தங்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேகன் மெர்க்கல் தனது கணவருடன் புறப்படவே தயாராக இருந்ததாகவும், ஆனால் கர்ப்பமாக இருப்பதால் அவரது மருத்துவர் பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தியதால் 39 வயதான மேகன் தற்போது ஹரியுடன் பிரித்தானியா திரும்பவில்லை என தம்பதியருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 17ம் திகதி இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், தெரிவு செய்யப்பட்ட 30 பேர்கள் மட்டுமே இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்கின்றனர்.