பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இஷாலினிக்கு நீதி வேண்டி தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியினர் 31.07.2021 நாளை காலை வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பதாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த போராட்டத்தில் அனைத்து மக்களையும் கலந்து இந்த சிறுமியின் இறப்புக்கும் சிறுவரை வேலைக்கு வைத்திருந்தமைக்கும் சரியான ஒரு நீதியை பெற்றுக்கொடுக்க ஒன்றினையுமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் ஜெய் சரவணா அவர்கள் தனது முகநூல் பக்கம் ஊடாக மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் இது இவ்வாறு இருக்க இஷாலினிக்கு நீதிகோரி நாடு பூராவும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.