ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் தொழிற்சாலையை மக்கள் பாவனைக்கு கொண்டு வர முயற்சி!!!

“ஈஸ்டர் ஞாயிறு மனிதாபிமானமற்ற செயலில்’ ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் ‘இப்ராகிம் குடும்பத்திற்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையை அமைச்சரவை பத்திரம் மூலம் மக்கள் பாவனைக்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கௌரவ விமல் வீரவம்ச தெரிவித்துள்ளார்.

இன்று (16) மாலை வெல்லம்பிட்டியிலுள்ள தாமிர தொழிற்சாலை வளாகத்தை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்
பின்வருமாறு கூறினார்.

“கடந்த மே 20 ஆம் தேதி அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த இடம், ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட இப்ராகிம் குடும்பத்தைச் சேர்ந்த சொத்து என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது தற்போது CIDயின் பாதுகாப்பில் உள்ளது.

இந்த செப்பு தொழிற்சாலையை தொழிற்துறை மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கொண்டு வர அமைச்சரவையில் ஒரு திட்டவரைபை சமர்ப்பிப்பதனூடாக இங்குள்ள அனைத்து இயந்திரங்களும் சிதைவடையாது பாதுகாத்து தாமிரம் சார்ந்த பொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்துவதற்கும்., இந்த இயந்திரங்கள் மற்றும் இடத்தினை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு நன்மை பயக்கும் வகையில்,
நாட்டின் செம்பு சம்பந்தப்பட்ட தொழில்களுக்குத் தேவையான பொருட்களின் விநியோகஸ்தர்களாக இந்த பிரதேசத்தை உருவாக்க முடியும். இது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக நாங்கள் இந்த இடத்தை பார்வையிட வந்தோம் எனவும் கூறினார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சின் தலைமை அதிகாரி அனுஷ்கா குணசிங்க மற்றும் இலங்கை தொழில்துறை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் உபசேன திசாநாயக்க ஆகியோர் உடனிருந்தனர்.