வவுனியாவில் நடக்கும் காணி ஊழல்களை அம்பலப்படுத்தினார் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இளைஞர் அணி தலைவருமான துசியந்தன் விக்ரர்ராஜ்
அண்மைக்காலமாக வவுனியாவில் பம்பைபடு மற்றும் பன்றிக்கொய்தகுளம் பகுதியில் ஒரு குழுவினர் வெளிநாடுகள் மற்றும் ஆட்கள் இல்லாமல் இருக்கும் காணிகளை பல கோடி ரூபாய்க்கு விற்று வருவதாகவும் தற்போது விடுதலைப்புலிகளின் ஓர் ஆரம்ப கால உறுப்பினரும் காட்டிக்கொடுத்தார் என விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார் என சந்தேகிக்கப்படும் மாத்தையா அவர்களுக்கு சொந்தமான காணி கள்ள ஆவணங்களுடன் ஒரு கோடி வரை விற்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான நபர்களின் காணிகளுக்கு இந்த நிலை எனில் பாமர மக்கள் காணிகளுக்கு என்ன நிலை எனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இன் பெயரை வைத்து இவ்வாறான செயல்கள் யாரும் செய்தால் அதை உடனடியாக நிறுத்துமாறும் தமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தவறுகளை தட்டிக் கேட்கும் படி தான் தம்மை வளர்த்தார் எனவும் ஆதாரங்கள் பல இருப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் தமிழ் டயஸ் போராக்களின் பங்கு இருக்குமே என எண்ணத் தோன்றுகிறது பல முறை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கொல்ல முயற்சி செய்து முடியாத நிலையில் அவரது கட்சிக்குள் ஊடுரிவி கட்சிக்கு கேட்ட பெயரை உருவாக்கி அரிசியில் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கலாம் என்று வியூகம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் இந்த நாசகார வேலையை தடுத்து நிறுத்த அமைச்சர் என்ன முடிவு எடுக்க போகுறார்.கட்சி தலைமை குழு ஆலோசகர்கள் என்ன செய்யபோகுறார்கள்.இது அமைச்சர் அவரது கவனத்திற்கு!!