ஊடகவியலாளர் வைத்தியர் முறுகல்!!!


நேற்று மாலை வவுனியா கோவில்குளம் பகுதியில் அரச வைத்தியர் ஒருவரால் நடாத்தப்படும் தனியார் மருந்தகம் ஒன்றிற்கு 10 வயது சிறுவனை உடல் ஒவ்வாமைக்கு மருந்தெடுப்பதற்காக ஊடகவியலாளராக பணிபுரியும் தந்தை தனக்கும் சரும நோய் ஒன்றிற்காக மருந்தையும் குடும்பத்தினர் அனைவருக்கும் பூச்சி மருந்தையும் கோரியிருந்தார் அதற்கமைய அங்கு பணியிலிருந்த பணியாளர் சிறுவனின் மருந்து உட்பட அனைத்து மருந்துகளையும் எந்தவித குறிப்புக்களோ அறிவுறுத்தலோ இன்றி ஒரே பையினுள் ஒன்றாக போட்டு வழங்கியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த ஊடகவியலாளர் குறித்த சம்பவத்தை பணியாளரிடம் உயர் தொனியில் கேட்ட போது வைத்தியருக்கும் குறித்த ஊடகவியலாளருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து குறித்த பிரச்சனையை குறித்த ஊடகவியலாளர் தனக்கு உரித்தான செய்தி தளத்தில் பதிவிட்டுள்ளார்

இந்த செய்தி குறித்து எமது செய்தியாளர் குறித்த வைத்தியரிடம் வினாவிற்கு!!
சம்பவம் உண்மை என்றும் குறித்த பிரச்சினையின் போது உமக்கு நான் தகுந்த பாடம் கற்பிப்பதாக கூறி சென்ற ஊடகவியலாளர் தனது இணையத்தளத்தில் இதை செய்தியாக வெளியிட்டுள்ளார்.என குறிப்பிட்டார்.