இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் மனிதாபிமானமாக மக்களுக்கு பணியாற்ற வில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் பல முறைப்பாடுகளை புலம்பெயர் அமைப்புகள் செய்து வருகின்ற இந்த நிலையில் இலங்கை வடமாகாணத்தில் வரலாற்றில் முதல் முதல் தமிழ் மக்கள் ஓர் இராணுவ அதிகாரியின் பிரிவை தாங்க முடியாது கண்ணீர் சொரிந்து மலர்மாலை சூடி விழாக்கோலம் பூண்டு ஓர் அதிகாரியை ஊர்வலமாக கொண்டு வந்தனர் இந்த சம்பவம் யாவரும் அறிந்ததே! இதுகுறித்து ஐநாவின் செயற்பாடு குறித்தும் விசுவமடு பகுதியில் உள்ள முன்னாள் போராளிகள் சிலரிடம் எமது செய்தியாளர் கருத்து கேட்டதற்கு அமைவாக
முன்னாள் போராளிகளின் கருத்தில் இருந்து ஒரு தொகுப்பு யார் இந்த அதிகாரி? நாம் முள்ளிவாய்க்காலில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு சென்று சமூக மயப்படுத்தப்பட்ட போது வேலை இன்றி நாமும் நமது குடும்பம் என்ன செய்வதென்று அறியாது இருந்தவேளை எம்மைப் போன்ற மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்திருந்தார். எம்ஐ முன்னாள் போராளிகள் என்று பார்த்ததில்லை. அவர் ஒரு இலங்கைராணுவ அதிகாரி எவ்வாறு இருக்க வேண்டுமே அவ்வாறு எங்களுடன் பழகினார் என கண்கலங்கி பதிலளித்தனர். இதைவிட தமிழ் தேசியவாதிகள் நீங்கள் இராணுவத்தினரின் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டதாக கூறுகின்றனரே? நமது பெயரை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்றும் முன்னாள் போராளிகளையே தமிழ் மக்களுக்கோ அவர்கள் இதுவரைக்கும் எதுவும் செய்ததில்லை நாம் CSDல் பணிபுரிவதால் எம்மை இராணுவத்தின் கைப்பொம்மைகள் என சித்தரிக்கிறார்கள் இதைப்பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.
இந்த ராணுவ அதிகாரியின் பெயரை உங்களால் குறிப்பிட முடியுமா? ஆம் கேணல் ரத்னபிரிய பந்து இவர் வேலை வாய்ப்பை விட வேறு ஏதாவது உங்களுக்கு விசேடமாக செய்திருந்தாரா? எமது பிறந்த நாள் விழாக்கள் தொடங்கி எமது கலாச்சார நிகழ்வுகள் வரை அனைத்தையும் தனது குடும்பம் போல் கவனித்து வந்தார். 30க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வீடுகளை அமைத்து தந்ததுடன் எமது சிறுவர்கள் கல்வி கற்பதற்காக தரமான சிறுவர் பாடசாலைகளை வாழ்வாதார ஊக்குவிப்பு களை எமது பிரதேசங்களில் வைத்தியசாலைகளிலும் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு வாகன வசதியும் செய்து தந்திருந்தார் இதைவிட என்ன செய்ய வேண்டும். இன்று ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புகளாலும் தமிழ் தேசியவாதிகளால் முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன எனவே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உண்மையில் ஆயுதமேந்திப் போராடியவர்கள் நாங்கள் எங்களிடம் அதை விசாரிக்கச் சொல்லுங்கள் எமது இலங்கை ராணுவம் செய்த மனிதாபிமான நடவடிக்கைகளை பொதுவில் சொல்ல நாம் தயாராக இருக்கின்றோம் என்றனர் இது இவ்வாறு இருக்க இவர்களின் கருத்துக்கள் உற்று நோக்கிய சமூக ஆர்வலர்களும் அரசியல் அவதானிகள் கேணல் ரத்ண பிரிய பந்து என்ற ராணுவ அதிகாரியின் இந்த மனிதாபிமான செயற்பாடுகள் தொடர வேண்டும் என்றும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானச் ஏற்பாடுகளை இந்த அதிகாரியின் செயற்பாட்டுடன் உற்று நோக்கி பார்க்க வேண்டிய அவசியத்தை வருங்காலத்தில்
ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் எடுத்து இவ்வாறான செயற்பாடுகளை உற்றுநோக்கும் என கருத்து தெரிவித்தனர்
Next Post