இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின விழாவை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாட ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவர்கள் வருகை தந்த போது அகில இலங்கை தமிழ்காங்கிரசினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இன்றையதினம் இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இலங்கை வரலாற்றை திருப்பிப் போடக்கூடிய ஓர் சிறந்த திரைப்படமாக்க வாய்ப்பிருப்பதாக தென் இலங்கை அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களையும் தடயங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது உண்மையில் இது ஜனாதிபதியால் தென் இலங்கை மக்களை ஏமாற்றி உள்ளூராட்சி தேர்தலில் பாரிய சிங்கள மக்கள் ஆதரவை திரட்ட ஏற்படுத்தப்பட்ட வியூகமாகவே தென்படுகிறது.ஜனாதிபதியால் வழங்கப்படும் அற்ப சலுகைகளுக்காக சொந்த மக்களை ஏமாற்றும் பாரிய இடைதரகர்களாக இவர்கள் இருப்பதுவும் தமிழ்மக்களின் உரிமை சார்ந்த விடயங்களுக்கு சாபக்கேடு எனலாம்.
இலங்கை வரலாற்றில் போலிஸ் நிலைய கைதிகள் கூண்டில் புகைப்படம் எடுத்தல்
தொலைபேசி பாவித்தல் இவை இரண்டும் இவர்களுக்காக விசேடமாக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சட்ட மாற்றங்கள் போல் உணரமுடிகிறது இதைவிட பொலிஸார் கைது செய்யும் போது கிளிந்த உடையுடன் காணப்படும் சட்டத்தரணி சுபாஸ் அவர்கள் பொலிஸ் நிலைய கூண்டில் குளித்து புதிய ஆடை மாற்றி முகநூலில் படங்கள் பதிவு செய்வதை நீங்கள் பார்கலாம்
என்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் தமிழ் மக்களின் மனதில் தாம் தான் விடுதலைப்புலிகளின் நிணல் என எண்ணக்கூடியதாக நினைவுநாட்களை அனுஸ்ரித்து இவர்கள் ஏமாற்றி வந்ததாக எண்ணத்தோன்றுகிறது உங்களுக்கு கைதிகள் கூண்டில் தொலைபேசி பாவிக்க ஒப்பந்தம் செய்த இவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு அவர்கள் குடும்பத்துடன் தினமும் பேசி ஓரளவு மனநின்மதி அடைய வழிவகுத்திருக்கலாம் ஆனால் தமிழ் சிங்கள மக்களை ஏமாற்ற இரண்டு தரப்பாலும் தீட்டப்பட்ட அரசியல் வியூகம் தவுடுபொடியானது என்பது தான் உண்மை