இலங்கை எங்குமே இல்லாத வகையில் விசித்திரமான சம்பவங்கள் வவுனியாவில் அரங்கேற்ற படுவதாக அறியமுடிகிறது வவுனியாவில் ஒரு சில அரசியல்வாதிகளின் துணையுடன் ஒரு சில மதுபான நிலையங்கள் நள்ளிரவு வரை தொடர்ந்து இயக்கப் படுவதும் சட்டவிரோதமாக விடுமுறை நாட்களில் கூட மதுபான விற்பனை போதைப்பொருள் விற்பனை கட்டப்பஞ்சாயத்து இவ்வாறாக இலங்கை சட்டத்திற்கு ஒவ்வாத விடயங்களை சில அரசியல் வாதிகளின் கைப்பொம்மைகள் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் பெயருடன் செய்து வருவது அம்பலமாகியுள்ளது இதுகுறித்து நமது இணையதளத்தில் பிரதேச செய்தியாளர் சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளார் இதைவிட பல ஆவணங்கள் இன்னும் கிடைக்க இருப்பதாகவும் கட்சி பேதமின்றி நடுநிலை ஊடகமாக இவ்வாறான தகவல்களை வெளிக்கொண்டு வர என்றுமே நாம் பின் நிற்க மாட்டோம் இவ்வாறான சம்பவத்திற்கு நாம் உடந்தையாக இருப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் மீண்டும் இருண்ட ஒரு வவுனியாவை உருவாக்க நேரிடும் இவ்வாறான அவர்களுக்கு எதிராக மதுவரி திணைக்களம் அரசாங்க அதிபர் மற்றும் முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா! எடுக்கத் தவறும் பட்சத்தில் அடுத்த பதிப்பில் இவர்கள் சம்பந்தமான ஆவணங்கள் வெளியிடப்படும்!