2022 ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக கைத்தொழில் அமைச்சர் கெளரவ விமல் வீரவன்சா அவர்களின் முயற்சியில் இலங்கை நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் கைத்தொழிற்சாலை அமைக்கும் திட்டம் நடை முறைபடுத்த முடிவு எடுக்கபட்டு இருக்கிறது.இது குறித்து கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல்வீரவன்ச அவர்கள் கைத்தொழில் அமைச்சில் விசேட சந்திப் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் இதே வேளை இதை சரியான தெரிவுகளுடன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தை உயர்த்துவதற்கு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைமுறை படுத்துமாறு கைத்தொழில் அமைச்சின் மாவட்ட மற்றும் மாகாண இணைப்பு செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்…
.இது குறித்து வடமாகாண கைத்தொழில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் வன்னிக்கான இணைப்பு செயலாளர் மற்றும் அமைச்சின் முக்கிய செயற்பாட்டாளர்களை நளைய தினம் அமைச்சர் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக அறிய முடிகிறது.