கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது!!!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 98 டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு மாதமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 டாலர்களை நெருங்கி இருந்தது.

இந்த விலை உயர்வு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த சூழ்நிலை காரணமாக உயர்ந்து சென்ற போதும் தற்போது கச்சா எண்ணெய் விலை சாதாரணமாக குறைந்து செல்வதை அவதானிக்க முடிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.