விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிய சீரியல்களில் ஒன்று பகல் நிலவு. சீரியல் ஒளிபரப்பு ஆன போது நிறைய சாதனைகளை செய்தது.
பின் சீரியல்களில் சில நடிகர்கள் மாற்றம் நடைபெற அப்படியே டல் அடிக்க தொடங்கியது. ரசிகர்களும் இந்த சீரியலுக்கு வரவேற்பு அளிக்கவில்லை.
எனவே திடீரென சீரியல் குழுவினர் முடித்துவிட்டார்கள். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சமீரா.
பகல் நிலவு சீரியலுக்கு பின் அவர் ஜீ தமிழில் ஒரு சீரியலில் முக்கிய நாயகியாக நடித்துக் கொண்டே தயாரிப்பு வேலையையும் செய்து வந்தார்.
அதன்பிறகு தனது நீண்ட நாள் காதலரும், நடிகருமான அன்வர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது சமீரா கர்ப்பமாக உள்ளாராம், அந்த தகவலை மக்களுக்கு புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.