காப்பி அடித்தாரா கௌதம் மேனன்!!!!

இயக்குநர் கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படம் பா.ராகவனின் நாவலை காப்பி செய்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நவரசா என்ற ஆந்தாலஜி படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 9 இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் இயக்குநர் கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படமும் ஒன்று.

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த படம் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நாயகன் லண்டன் சென்று தனது இசைத் திறமையை நிரூபிக்க நினைப்பது போலவும், தன்னிடம் பாட வரும் பெண்ணின் மீது காதல் கொள்வது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இறுதியில் காதலுக்காக லட்சியத்தை விடுவதாக வந்தாலும் இறுதியில் நாயகன் லண்டனில் கச்சேரி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த கதை பிரபல எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய இறவான் நாவலை காப்பி செய்து எடுக்கப்பட்டுள்ளதாக வாசகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்