கிராம அலுவலர் மற்றும் சுகாதார ஊழியர்கள் பிரச்சனைகள் அமைச்சர் விமல் வீரவன்ச கவனத்திற்கு!


கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்களின் கீழ் வடமாகாணத்தில் செயல் படும் வடமாகாண விமல் அணியினருக்கு அமைச்சரின் வடமாகாண மற்றும் வன்னி இணைப்பு செயலாளர்களுக்கும் இடையில் இன்று மதியம் zoom மூலம் அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்றதாக அறிய முடிகிறது.இந்த சந்திப்பில் வவுனியாவில் இன்றைய நிலைமை மக்களின் வாழ்வாதாரம் அரச அதிகாரிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் சம்மந்தமாக விமல் அணியினரால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சொல்லுமாறு பல சமூக நலன் சார்ந்த விடயங்கள் முன் வைக்கப்பட்டதாக வன்னிக்கான இணைப்பு செயலாளர் புஸ்பதேவா அவர்கள் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில். வவுனியாவில் கிராம மட்ட அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக covid தோற்று உறுதிப்படுத்தப்படும் இந்த நிலையில் அணைத்து கிராம மட்டத்தில் பணிபுரியும் அரச அலுவலர்களையும் பி.சி.ஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனை செய்து அவர்களின் பாதுக்ப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும் என்றும் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் இந்த காலப்பகுதியில் ஆசிரியர்கள் சம்பளப் பிரச்சனை சம்மந்தமாக கருசனை கொள்வதை விட மக்களுடன் மக்களாக இரவு பகல் பாராது அரச சட்டத்தை மதித்து சேவை செய்து வரும் கிராம அலுவலர்களுக்கு சுகாதார பரிசோதகர்கள்.சுகாதார ஊழியர்கள்’பாதுகாப்பு படையினர் சம்பள உயர்வோ அல்லது ஊக்கத்தொகையாவது வழங்க முன்வருமாறும் விமல் அணியினரால் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன என்றும் இவை அமைச்சருக்கும் தெரிய படுத்தி இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.இது குறித்து ஒரு சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் கிராம அலுவலர்கள் இரண்டாம் தொழில் செய்ய முடியாது எனவும் அவர்கள் ஓர் புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தால் கூட அதில் வரும் வருமானத்தை அரசாங்கத்திடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிராம சேவையாளர்களால் எந்த போராட்டமும் நடத்த முடியாது என்றும் அதனால் சம்பள உயர்வு கோரி போராட கூட முடியாது இருக்கும் இவர்களின் ஊதியம் சம்மந்தமாக அமைச்சரின் கீழ் உள்ள விமல் அணியின் கருசணையையும் அர்ப்பணிப்பான செயலையும் பாராட்டினார்