கொ.ரோ.னா.வா.ல் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 27ம் திகதி சச்சினுக்கு கொ.ரோ.னா தொற்று உறுதியான நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சச்சின் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள், வீரர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் கொ.ரோ.னா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, நான் மருத்துவமனைியிலிருந்து வீடு திரும்பிவிட்டேன், தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருந்த படி ஓய்வெடுத்து உடல் ஆரோக்கியம் பெறுவேன்.
எனக்கு வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
என்னை நன்றாக கவனித்துக்கொண்ட மற்றும் கடந்த ஓராண்டாக பல இக்கட்டான சூழ்நிலையில் ஓய்வின்றி பயணியாற்றி வரும் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.