இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வீட்டில் நடந்தது என்ன?யாரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்?இவர் திட்டம் இட்டு கொலை செய்யப்பட்டாரா? இவரின் கொலைக்கு நீதி வேண்டி நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வீட்டார் மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வி பலரது மனங்களில் புரியாத புதிராக உள்ளது. பல ஒரு பக்க வாதம் கதைக்கும் முஸ்லீம்கள் கூட மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றமையும் ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவு படுத்தக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுவதும் வேதனை அளிக்கிறது. இந்த சிறுமி நடத்தைகள் சம்பந்தமாகவும் ரிஷாட் பதியுதீன் காப்பாற்றும் நோக்கிலும் பிழையான கருத்துக்களை தமிழ் பெண்களை தவறானவர்கள் போன்று சித்தரிக்கும் கருத்துக்களையும் பதிவிடுவதை பல அரசியல் அவதானிகள் சமூக ஆர்வலர்கள் தமது கண்டனங்களை பதிவிட்டு வருகின்ற இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு மற்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களை காப்பாற்றுவதற்காக பலவகையான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முயற்சிகள் எடுத்துவந்த ஒரு பக்க வாத கருத்துக்களை வெளியிடும் முஸ்லிம் அமைப்புகளும் மீண்டும் இந்தக் சிறுமியின் விடயத்தில் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு எத்தனிப்பது அப்பட்டமாக தெரிகிறது இவர்களை மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதற்கு இவ்வாறான இவர்களின் கீழ்த்தரமான பதிவுகள் சான்று.இதுவரைக்கும் ரிஷாட் பதியுதீன் அவர்களின் குடும்பத்தினர் இந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாகவே அல்லது தமது தவறை ஏற்றுக்கொண்டதாக எதுவித கருத்தும்பபதியப்படவில்லை. சிறுமியின் கொலை ஒருபக்கம் விடுவோம் ஆனாலும் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் சமூகத்தின் சிறந்த மனிதர் என தனக்குத் தானே புகழைச்சூடும்
ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது குற்றம் என தெரியாதா! இல்லை தெரிந்தும் இந்தக் குற்றத்தைச் செய்தாரா! இவ்வாறான தொடர் தவறுகளைச் செய்யும் மனிதர்களை ஒவ்வாறு சமூகத்தின் தலைமைகள் என அழைப்பது இவர்கள் எவ்வாறு சமூகத்தை வழி நடத்துவது இவ்வாறான பல கேள்விகளுடன் இசாலினிக்கு நீதி கிடைக்குமா? இல்லை மறுக்கப்படுமா? காத்திருக்கும் இலங்கை சமூகம் …
Prev Post