மக்களின் வாக்குகளில் பிரதேச சபை சென்று சொந்த கடமை பரிபவர்கள் மத்தியில் மக்கள் குறை தீர்க்க சமூகத்துக்கு இவர் ஒரு மாமனிதன் தான் 2017 ஆம் ஆண்டு முதல் கதிர்காமராஜா புஸ் அண்ணா அவர்களால் தோனிக்கல் சிவன்கோவில் வீதி மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் இருப்பது கிராம பொது அமைப்புகள் மற்றும் கிராம மக்களின் கையோப்பம் இடப்பட்ட முறைப்பட்டு கடிதம் பிரதேச சபை மற்றும் அனர்த்தமுகாமைத்துவம் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டும் பல அதிகாரிகள் இந்த வீதி உடனடியாக சீர்செய்ய வேண்டும் என்று கூறியும் பிரதேச சபையின் கவலையீனத்தால் இந்த வீதி இதுவரை அவர்கள் கண்ணுக்கு தென்படவில்லை ஆனால் சில பிரதேச சபை உறுப்பினர்கள் தமது வீட்டுக்கு மட்டும் பயன்படுத்தும் பாதையை அரச நிதியில் கோங்கிறீட் வீதியாக்கியுள்ளனர் மக்கள் பணத்தில் சொந்த வீட்டுக்கு பாதை ஆனால் இதுவரை இந்த மக்களின் கோரிக்கை எழுத்து வடிவில் மட்டுமே இனியாவது இந்த வினாக்களுக்கு உருவம் கிடைக்குமா? புஸ் அவர்களின் மறைவுக்கு பின் அவரின் சமூக அக்கறையின் மறு உருவமாக அவரது மகன் இயங்கி வருவது யாவரும் அறிந்ததே! சில நாட்களுக்கு முன் பலத்த மழையால் மக்கள் பயன்படுத்த முடியாமல் இந்த வீதி இருந்த மை குறிப்பிடத்தக்கது. அன்று கூட தனி ஒருவனாக நின்று பதையை மக்கள் பாவனைக்கு மாற்றும் நடவடிக்கையில் தீவரமாக இறங்கியிருந்தார். மக்கள் வாக்கில் சுகபோகம் அனுபவிப்பவர்கள் மத்தியில் சொந்தப் பணத்தில் சமூகத்துக்காக வாழும் இவர்களின் கோரிக்கை அதிகாரிகளின் செவிகளில் கேட்க மறுப்பது ஏன்! இல்லை மக்களுக்கான சேவையை சரிவர செய்ய நீங்கள் எதிர்பார்ப்பது என்ன ?என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.