சமூக சேவையில் புதிய திருப்பம்!!

அன்பே சிவம் அமைப்பினரினால் வவுனியாவில் தாய் அல்லது தந்தையை இழந்த 10 மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்ப்பட்ட பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.2022.03.04 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு இந்த உதவி வழங்கும் நிகழ்வு சமளங்குளம் அ.த.க பாடசாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை றூபா ஆசிரியர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

வவுனியாவில் சமூக சேவைகள் என்ற பெயரில் 1000 ரூபாய்க்கு உதவி செய்யும் அமைப்புகள் மத்தியில் இவ் அமைப்பின் இச்சேவை மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

அத்துடன் இன்று மதிய நேர உணவும் இம்மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

இந்த நிகழ்வில் கோவில்குளம் சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.