முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனம் தொலை இயக்கி வடிவமைப்பில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை உட்புகுத்தி சாதனை படைத்துள்ளது.
அதாவது தற்போது வரைக்கும் சிறிய ரக மின்கலங்களில் இயங்கி வந்த ரிமோட்களில் சூரிய படலத் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்கின்றது.
இதன்படி சூரிய சக்தியைப் பயன்படுத்தி குறித்த ரிமோட்கள் செயற்படக்கூடியதாக இருக்கும்.
முதன் முறையாக இந்த ரிமோட்கள் சாம்சுங் நிறுவனத்தினால் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள தொலைக்காட்சி சாதனங்ளுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இப் புதிய தொழில்நுட்பத்தினால் எதிர்காலத்தில் AAA வகை மின்கலங்களின் பயன்பாடானது வெகுவாக குறைவடையவுள்ளது.
இது தவிர குறித்த ரிமோட்கள் வெறும் 31 கிராம் பிளாஸ்டிக்கினை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன.