யாஸ்மின் சூகாவுக்கு பதிலடி கொடுத்த இலங்கை தமிழ் சமூக ஆர்வலர்!!

ஐ.நாவின் முன்னாள் அதிகாரி யாஸ்மின் சூகா சர்வதேச குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட் ஆகியோரிடம் ஒரு தவறான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார், சித்திரவதைக்கு உலகின் முதலிட நாடாக இலங்கை பெயரிடப்பட்டது.

சித்திரவதையின் விளைவாக ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அவர் மேலும் கூறினார். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அவர் வெளியிடவில்லை. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யாஸ்மின் சுகா ஷவுனரி தாக்கல் செய்த 81 வது அறிக்கை இதுவாகும்.இதுகுறித்தி இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது இலங்கையில் இருந்து வெளிநாடுகள் சென்று புகலிடம் கோருவோரின் புகளிடத்திற்காக பிரத்யேகமாக சித்தரிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் தான் இவர் இதனை கூறுகிறார் என்றும் இவ்வாறு சித்தரிக்கப்பட்ட வழக்குகளை தாம் பொய் என நிரூபிக்க முடியும் என்றும் இவ்வாறான போலி வழக்கு பிரதிகள் பலதை பார்த்து இருப்பதாகவும் இதற்கான பதில் கடிதம் ஒன்றை பாதிக்கப்பட்ட என இவர் கூறிய இனம் சார்பாக ஜனாதிபதி ஊடாக அனுப்ப தயாராக இருப்பதாக கூறினார்.