சிறுமியின் மரணத்தின் பின்னனியில் இவர்களா!!!

இன்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் ஒரிரு தினங்களாக காணமால் ஆக்கப்பட்டு உடலம் கைப்பற்றப்பட்ட சிறுமி நிதர்சனாவுக்கு நீதி வேண்டி ஒரு கும்பல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது முல்லை மாவட்ட செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் குறித்த சிறுமி இரண்டு மாத கற்பம் தரித்த நிலையில் சட்டவிரோதமாக கருகலைக்க முற்பட்டு ஏற்பட்ட இரத்தப் போக்கினால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாகவும்

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இது இவ்வாறு இருக்க எமது நாட்டில் தமழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்களை வைத்து அரசியல் லாபம் பேற ஒரு சிலர் முயற்சித்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

குறித்த ஒருசில சம்பவங்களை வைத்து பார்க்கையில் இவ்வாறான சம்பவங்களுக்கு போதைவஸ்து ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் இந்த போதைவஸ்து வியாபாரிகளே! இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன் நின்று நடாத்துவது பார்க்க முடிவதாகவும் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட முற்படுவதாகவும் இவர்களின் வலையில் இரக்க மனம் கொண்ட சிலர் இவர்களின் மாஜயால வர்த்தையை நம்பி இவர்கள் பின் செல்வதாகவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்தனர். இதுவரை போதைவஸ்துக்கு எதிராக இவர்கள் குரல் கொடுக்க தயங்கியது ஏன் வித்தியா முதல் இன்று வரை பிணங்களின் மேல் அரசியல் செய்ய முயற்சிக்கும் போதைவஸ்து மாபியாக்கள் இவர்களா!!!