ஜனாதிபதிபதிக்கு எதிராக செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்….இடமாற்ற கோரி மகஜர்!!!!

வவுனியா இறம்பைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யுமாறு கோரி மூன்று கிராம அபிவிருத்தி சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறம்மைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி மூன்று கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கூட்டாக பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,
எமது கிராம சேவகர் பிரிவான இறம்பைக்குளம் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமைபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட 3 மில்லியன் ரூபாய் பாதீட்டு திட்டத்தில் எமது மக்கள் கூட்டத்தில் தீர்மானிக்கபடாத தன்னிச்சையான பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை எமக்கு ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.மக்களுடன் கலந்துரையாடி இந்த பாதீட்டை நடைமுறைபடுத்துமாறு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய நிதி அமைச்சால் அறிவுறுத்தப்பட்டிருந்தும் அரசாங்கத்துக்கு விரோதமாக ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை மக்கள் மத்தியில் பிழையான பார்வைக்கு திருப்பும் நோக்கில் சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ்வாறான மக்களையும் ஜனாதிபதியையும் ஏமாற்றும் செயற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சரியாக கடமைக்கு கிராமங்களுக்கு செல்வதில்லை என்பது ஏற்கனவே எமது தளத்தில் பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மேற்படி நபரால் பரித்துரைக்கப்பட்ட பல விடயங்கள் மக்கள் பணத்தினை வீணாக்கும் செயற்பாடு மட்டுமன்றி இதனை ஒருமுறை கேடாகவே நாம் பார்க்கின்றோம்.

ஆகவே குறித்த நபரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நிராகரித்து மேற்படி கூட்டத்தினை மீண்டும் ஒழுங்கு செய்து சரியான முடிவினை எடுப்பது மட்டுமன்றி மேற்படி உத்தியோகத்தர் தனது அலுவலகத்திற்கு வருவதோ மக்கள் சந்திப்புக்களை முறையாக மேற்கொள்வதோ இல்லையென்பதுடன், தனது கடமையை செய்வதில் ஆர்வம் இல்லாமை போன்ற காரணங்களினால் மேற்படி நபரை எமது கிராம சேவகர் பிரியில் இருந்து மாற்றித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் சின்னப்புதுக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் , இறம்பைக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், சகாயமாதாபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் கையோப்பம் இட்டு பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் ஆகியோருக்கு கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இறம்பைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்புகொண்டு வினவிய போது,

‘சுற்று நிருபத்தில் உள்வாங்க முடியாத விடயங்களை இவர்கள் கோரியமையினால் அவற்றை 3 மில்லியன் ரூபாய் பாதீட்டு திட்டத்தில் உள்வாங்க முடியவில்லை இவ்விடயமே அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது தவிர வேறு எவ்வித விடயங்களும் இல்லை’ என தெரிவித்தார்.இது குறித்து சட்ட ஆலோசகர் கள் ஊடாக சுற்று நிருபத்தை ஆராய்ந்து பார்த்த போது இவர் சுய லாபத்தை இலக்காக கொண்டு அரசாங்கத்தை பிழையாக சித்தரிப்பதற்காக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது’