ஜனாதிபதியின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க தயாராகும் விவசாயகிராம மக்கள்!!!

வவுனியா சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள எல்லப்பர்மருதன்குளம் விவசாயக் கிராமத்தில் கிராம மக்களின் தன்னார்வத்தால் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அக்கிராமத்திற்கான கமக்கார அமைப்புக்கள் இன்று சமளங்குளம் கிராம சேவையாளர் மற்றும் கமநல உத்தியோகத்தர் ஈழபிரசாத் தலைமையில் பெண்கள் கமக்கார அமைப்பு மற்றும் கமக்கார அமைப்பும் ஆகியன ஆரம்பிக்கப்பட்டது இது குறித்து கிராம வாசிஒருவர் கருத்து தெரிவிக்கையில் எமது கிராமம் பெயர் வடிவில் அல்லாது நிஜவாழ்க்கையிலும் விவசாய கிராமமே எனத் தெரிவித்த அவர் இயற்கை விவசாயத்தை அவர்கள் விரும்புவதாகவும் மக்களின் அடி மனதாசைக்கு ஜனாதிபதி செயல்வடிவம் குடுக்க முயற்சிப்பதாகவும் அவரின் சிறப்பான திட்டத்துக்கு செயல்வடிவம் குடுக்க வேண்டியது மக்களின் கடைப்பாடு என்று அவர் கூறினார்.அந்த கிராம சேவையாளர் பிரிவை பார்க்கும் போது இயற்கை எழில் நிறைந்த கிராமமாகவும் மனதுக்கு ஓர் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.இருப்பினும் கால்நடைகள் மற்றும் விவசாயத்தை பிரதான வருவாயாக கொண்ட இந்த கிராமத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் தனியார் காணிகளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்த மேய்ச்சல் நிலங்கள் பறிபோகும் சந்தர்பத்தில் இந்த கிராம கால்நடை வளர்பாளர்களின் நிலை என்ன இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு!