அபிவிருத்திக் குழுத் தலைவரை சாடிய வவுனியா நகரசபை தலைவர்!!!

இன்றையதினம் வவுனியா நகரசபை தலைவர் அவர்களால் ஒரு ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது இந்த சந்திப்பில் வவுனியா அபிவிருத்தி குழு தலைவர் அவர்களால் உண்மைக்கு புறம்பான செய்திகளை தன்னைத்தானே அபிவிருத்தி நாயகனாக காட்டக்கூடியவாறு அவரது முகநூல் வயிலாக வெளியிட்டு வருவது குறித்து நகரசபைத் தலைவர் கருத்து தெரிவிக்கையில்!இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களால் 100 நகரங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த விடயம் முன்னர் வவுனியாவில் இருந்த அரசாங்க அதிபர் சமன்பந்துல சேன அவர்களுடன் வவுனியா நகரசபையும் இணைந்து நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் வவுனியா நகர வடிவமைப்பு அபிவிருத்தி அழகு படுத்தல் திட்டம் என பல வடிவங்களில் நகர்ந்து வரும் ஓர் வேலைத்திட்டம் இந்த திட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களாலும் எட்டு மாதங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஓர் விடயமாகும் இன்று புதிதாக நடைமுறைக்கு வரும் ஓர் விடயம் போல் சித்தரித்து நகரத்தை அழகு படுத்துவதற்கு தான் முன்னின்று செயற்படுவது போலும். தானே இத் திட்டத்தை உருவாக்கியது போலும் மக்களுக்கு போலியான தகவல்களை அபிவிருத்தி குழுதலைவர் வழங்கி வருவது மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் செயல் என கூறினார்! இது இவ்வாறு இருக்க பல்கலைக்கழக பெயர் மாற்றம் தடுப்பூசிவன்னிக்கான வரவு மற்றும் பிசிஆர் இயந்திரம் வவுனியாவிற்கான வருகை இவ்வாறு பல தகவல்களை மக்கள் அறிந்திருப்பீர்கள் இவை அனைத்தையும் ஒவ்வொரு தடவையும் வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவர் அவர்கள் கொழும்பு சென்று வரும்போது ஒவ்வொரு விடயத்தை நிறைவேற்றி வருகிறார் போல உள்ளது மிக விரைவில் சிங்கப்பூர் போல் மாற்றி விடுவாரா வவுனியாவை! அல்லது முகநூல் நண்பர்களை மகிழ்ச்சி படுத்த இவ்வாறான பதிவா என் எண்ணத் தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்

.