தடுப்பூசி ஏற்றச் சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் குளம் மற்றும் வெளிக்குளம் மற்றும் சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவுகளில் 3.08.2021 நேற்றைய தினம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டிலுள்ள முப்பது வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் தடுப்பு ஊசி ஏற்றும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற இந்த வேளையில் சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் நேற்றையதினம் 3 கிராம சேவையாளர் பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் தடுப்பூசிகள் மீதமாக இருந்தபோதும் நமது வேலை நேரத்தை கருத்தில் கொண்டு இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடுமுடங்கி இருந்தமையால் கிராமங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது மீண்டு வருகின்ற இந்த வேளையில் ஒருநாள் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்ய சாதாரணமாக 30 ஆயிரத்திற்கு அதிகமானபணம் செலவு செய்யப்படுகிறது இந்த பணம் கிராம மக்களின் பணமே! மீண்டும் சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் திருப்பி அனுப்பப்பட்ட மக்களுக்காக ஓர் தடுப்பூசி ஏற்றும் ஏற்பாடு செய்வதாக இருந்தால் 30ஆயிரத்துக்கு அதிகமான பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் மக்கள் தள்ளப்படுகிறார்கள் கௌரவ ஜனாதிபதியின் செயற்பாட்டிற்க்கு செயல் வடிவம் கொடுப்பது அரச அதிகாரிகளின் கடமை அல்லவா!வவுனியாவில் தடுப்பூசியை நான்தான் எடுத்து வந்தேன் என உரிமை கொண்டாடும் அரசியல்வாதிகளால் ஏன் மக்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றும் கிராம மட்ட ஏற்பாடுகளை மக்களுக்கு செய்து கொடுக்க ஏன் முடியவில்லை? சுகாதார பரிசோதகர்களால் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அறியமுடிகிறது.இந்த தடுப்பூசி ஏற்றும் ஏற்பாட்டை தமது கிராம மக்களுக்காக அர்ப்பணிப்புடன் ஒழுங்கு செய்த கிராம சேவையாளர்களை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்ற இந்த வேளையில் திருப்பி அனுப்பப்பட்ட மக்கள் வேறு நகர் பகுதியில் உள்ள நிலையத்துக்கு வருமாறு கூறியதாகவும் மக்கள் தெரியவருகிறது….