தடுப்பூசி ஏற்றப்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலை அனுமதி!ஒவ்வாமையா?ஊடகமா?

இன்றைய வடமாகாணத்தின் ஊடகங்களின் மற்றும் சமூகத்தளங்களின் பேசும் பொருளாக இருந்த covid தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி யாவரும் அறிந்ததே! இந்த செய்தி குறித்து எமது செய்தியாளர் வவுனியா இராசேந்திரன் குளம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்து வினாவிய போது சில உண்மைத்தகவல்களை அறிய முடிந்தது.தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி என்ற செய்தி காலையில் சமூகத்தளங்களில் பரவியிருந்ததை தாம் பார்வையிட்டதாகவும் அதனால் ஊசி மருந்து ஏற்றுவதற்கு தாம் பயந்து கொண்டு சென்றதாகவும் அந்த இடத்தில் தமக்கு ஏற்பட்ட மன அழுத்தமே தமது ஒவ்வாமைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தமக்கு (வீசிங்) ஏற்கனவே இருப்பதாகவும் தெரிவித்தனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் அவ்வாறே இருந்ததாக தெரிவித்திருந்தனர்.இந்த கருத்துக்களை இன்று பாதிக்கப்பட்ட ஊழியரே பகிர்ந்து கொண்டார்.இது குறித்து கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த ஊழியரும் இதை ஒத்த பதிலை வழங்கியிருந்தார் அவ்வாறாயின் இன்றைய ஒவ்வாமைக்கு காரணம் தடுப்பூசியா?முகப்புத்தகமா?என்று சிந்திக்க தோன்றுகின்றது.