தடுப்பூசி விநியோகத்தை தாமதப்படுத்திய பிரித்தானிய நிறுவனம்! கடும் கோபத்தில் ஐரோப்பா…!!

ஆர்டர் செய்யப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களை விநியோகிக்க மேலும் தா.ம.த.மா.கு.ம் என அஸ்ட்ராஜெனெகா கைவிரித்ததால் ஐரோப்பா கடும் கோ.ப.த்.தை வெளிப்படுத்திவருகிறது.

India approves Oxford's AstraZeneca Covid-19 vaccine for emergency use

ஐரோப்பா வரும் மார்ச் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென பிரித்தானிய நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிடம் ஒ.ப்.ப.ந்.த.ம் செய்திருந்தது.

ஆனால், தற்போது உள்நாட்டு தேவை அதிகமாக இருப்பதாலும், தயாரிப்புகள் குறைந்துள்ளதாலும் தடுப்பூசி விநியோகம் தாமதமாகலாம் என அஸ்ட்ராஜெனெகாவின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பா ஒன்றியம் மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 80 மில்லியன் டோஸ்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது சுமார் 31 மில்லியன் டோஸ் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பா ஆர்டர் செய்வதற்கு 3 மாதத்திற்கு முன்னரே பிரித்தானிய அரசு ஆர்டர் கொடுத்துள்ளதாக காரணம் கூறியதுடன், அஸ்ட்ராஜெனெகா விநியோக சி.க்.க.ல்.க.ளை.க் கையாள்வதில் பின்னைடைவை கண்டுள்ளதாகவும், உற்பத்தி சிக்கல்களை சரிசெய்ய நிறுவனம் 24/7 வேலை செய்துவருவதாகவும் தா.ம.த.ம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

எவ்வாறாயினும், பிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒரு நல்ல பகுதியை வழங்க அஸ்ட்ராசெனெகா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

குறைந்தது 3 மில்லியன் டோஸ்களை உடனடியாக ஐரோப்பாவிற்கு அனுப்புவதாகவும் , பின்னர் பிப்ரவரி மாதத்திற்குள் 17 மில்லியன் டோஸை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த வார இறுதியில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவிருந்த நிலையில், இப்படிப்பட்ட பதில்களால் அதிருப்தியடைந்துள்ள ஐரோப்பிய அதிகாரிகள் கடும் கோ.ப.த்.தை வெளிப்படுத்தி வருகினற்னர்.