தனிப்பட்ட விரோதத்தில் செய்தி வெளியிட்ட இணையத்தளம்!!!பழ வியாபாரி புகார்!!!

வவுனியாவில் உள்ள நடமாடும் பழ வியாபாரிகள் அதிக விலைக்கு பழங்களை விற்பனை செய்வதாக வவுனியாவில் உள்ள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இந்த செய்தி தனிப்பட்ட விரோதம் காரணமாக வெளியிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட நடமாடும் பழ வியாபாரி எமது செய்திச் சேவையை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

covid அச்சம் காரணமாக விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்ட நிலையில் தம்மால் விற்பனை செய்யப்படும் பழங்கள் வெளிநாட்டு பழங்கள் என்றும் இந்த இடர் காலத்தில் தமது கொள்முதல் விலை அதிகமாக காணப்படும்.

இந்த சந்தர்ப்பத்திலும் 5 பழங்கள் விற்பனை செய்யப்படும் போது 33 ரூபாய் லாபம் கிடைப்பதாகவும் பழங்கள் நாளாந்தம் பழுது படக்கூடியவை என்பதால் சில சந்தர்ப்பத்தில் இதை விட குறைந்த லாபம் தான் தமக்கு கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த இணையத்தளம் தனிப்பட்ட விரோதம் காரணமாக புனையப்பட்ட செய்திகளை வெளியிடுவதாகவும் வவுனியாவில் அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்படுவதும் விலை மாற்றம் செய்யப்படுவதும் அதிக விலைக்கு விற்கப்படுவதும் அணைவரும் அறிந்ததே இவ்வாறான மொத்த விற்பனை நிலையங்களையும் முதலாளிகளிலும் வாய் வைக்க பயந்த இந்த ஊடகம் வாழ்வாதாரத்திற்காக சிறு வியாபாரங்கள் செய்யும் வியாபாரிகள் மீது போலி செய்திகளை வெளியிட்டு எம்மை மன ரீதியாகவும் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை விதைக்க நினைப்பதாக வரும் தெரிவித்தார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் முற்றிலும் முறையற்ற செய்தி என்றும் இவர்களால் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரிகள் என பலருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த போதிலும் எமது பக்க ஆதாரங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு திரும்பி சென்றதாகவும் இந்த ஊடகம் தமது முறைப்பாட்டுக்காக தவறு இல்லாத ஒருவரை தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது அந்த செய்தியின் வாயிலாக தெரிய வருகிறது.

வவுனியாவில் மக்களுக்காக குரல் கொடுக்கும் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கும் சிறந்த ஊடகவியலாளர்கள் இருக்கும் போது இவ்வாறான சிலரின் செயற்பாடு மன வேதனையை தருவதாகவும் இதற்கு வவுனியாவில் ஊடக சங்கம் ஒன்று இருக்குமாக இருந்தால் இதை விசாரித்து இந்த ஊடகத்தின் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல விரும்பிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.