தமிழரை மீண்டும் பாதாளத்தில் தள்ள எத்தனிக்கும் வவுனியா தமிழ் குழு!

தம்மை ஓர் தமிழ் தேசிய பற்றாளர்கள் போல் சித்தரித்து விடுதலைப்புலிகளின் நினைவுதினங்களை அனுஷ்டித்து வந்த ஓர் வவுனியா குழு இலங்கையின் பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்திப்பதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள விடுதியில் கடந்த ஓர் இரு தினங்களாக முகாம் இட்டு தங்கியுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.

இவர்கள் தமிழர் பிரதேசங்களில் தம்மை தமிழ் தேசிய பற்றாளர்களாக காண்பித்துக் கொண்டு மறுமுனையில் ஆளும் அரசாங்கத்துக்கு தாம் ஆதரவு கரம் நீட்ட தயார் என காண்பிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் தமது பிள்ளைகளின் தியாகத்தை வைத்து வியாபாரம் செய்ய முயற்சிப்பதாகவும் இவர்களை தமிழ் மக்கள் கவனத்தில் எடுப்பது இல்லை இவர்கள் வேறும் வெற்றுக் காகிதம் போன்றவர்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராடி மடிந்த மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நின்மதியாக தமிழர்கள் வாழ்வது பிடிக்காமல் சீமான் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் சதி வலையாக கூட இருக்கலாம் எனவும் இந்த அரசாங்கம் இவ்வாறான நபர்களை மிக இறுக்கமாக அவதானித்து சந்திப்பது சிறந்தது என்றனர்.இவர்களின் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் பாதிக்க கூடும் எனவே அரசாங்கம் சரியான முறையில் இவர்கள் சம்மந்தமாக ஆராய்ந்து சந்திப்புக்களை நடத்த வேண்டும் என கூறினார்கள்.