இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பொசன் பௌர்ணமி தினத்தன்று 16 தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு கீழ்பட்டு பொது மன்னிப்பில் விடுதலை செய்தார் என்பது ஒரு வாரமாக தமிழ் ஊடகங்களின் பேசுபொருளாக காணப்பட்ட இந்த வேளை புலம்பெயர் சமூகம் சார்பாக அணஸ்லி ரட்ணசிங்கம் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் எதிர் கருத்துக்களை கூறி தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் அபிவிருத்திகளை குழப்பும் வகையில் நடந்து கொள்ளுவதையும் தமிழ் தேசியத்தின் பின் இழுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொதுஜன முன்னணி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளை நினைவுபடுத்தினார் அவர் மேலும் கூறுகையில் 2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் அகப்பட்ட மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களை விடுவித்து மீள்குடியேற்றம் செய்தமையையும் 13000 முன்னாள் போராளிகளை சமூக மயபடுத்தியதையும் நினைவுபடுத்தினார் அன்றைய காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகவும் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்ததாகவும் இன்றைய 16 கைதிகளின் விடுதலையின் போதும் அதே அரசாங்கமும் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியாகவும் முன்னாள் ஜனாதிபதி பிரதமராகவும் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் நன்றி மறப்பது நன்றன்று என்ற வாக்கியத்திற்கு அமைவாக தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகள் இந்த சிறப்பான அரசாங்கத்திற்கு ஆதரவளித்து மீதமுள்ள அரசியல் கைதிகளையும் இலங்கையின் தமிழ் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும் என்று புலம்பெயர் சமூகம் சார்பாக அனஸ்லி ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.