வவுனியா எம்பியால் பதறிய பாராளுமன்றம் : சுமந்திரன் எம்.பி இறந்த சடலங்களில் நகை அறுத்த கள்ளரா..? வெளிவந்த உண்மைகள்!!

இலங்கை பாராளுமன்ற அமர்வில் தம்மை மறந்து முட்டி மோதிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்.இந்த வீர விவாதத்தில் செஞ்சோலையில் பயிற்சிக்காக அழைத்து சொல்லப்பட்ட மாணவ மாணவிகள் இலங்கை விமானப்படையின் எறிகணை வீச்சில் தவறுதலாக கொல்லப்பட்டதாக எண்ணி இருந்த தமிழ் மக்களுக்கு பாரிய அதிர்ச்சி செய்தி ஒன்று ஆதாரமாக அகப்பட்டது.இந்த சிறுவர்களை காட்டிக் கொடுத்தது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எனவும் பகிரங்க சபையில் கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலிபன் அவர்கள் வீர உரை நிகழ்த்தினார்.இதை விட இறுதி யுத்தத்தில் இறந்த எம் தமிழ் உறவுகளின் உடலில் இருந்த நகைகளை களவாடியது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அவர்கள் எனவும் இந்த உயரிய சபையில் கு.திலிபன் அவர்கள் தெரிவித்தார். இந்த விவாத நிகழ்வை பார்த்த தமிழ் மக்கள் பலர் இவர்களையா பாராளுமன்றம் அனுப்பினோம். என தமது ஆதங்கத்தை பதிவு செய்து கொண்டனர். ஆதாரங்கள் இல்லை என அலையும் உலக நாடுகளே! இலங்கை நீதி துறையே! உங்களுக்கான வாக்குமூலம் இலங்கையின் உயரிய சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யார் காட்டிக் கொடுத்தவர்? யார் கள்வன்? யார் முட்டாள்? என்பதை அப்பாவி மக்களுக்கு இனங்காட்ட வேண்டியது உங்கள் கடமையல்லவா? சட்டம் தன் கடமையை செய்யுமா? இல்லை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது விதி விலக்கா? என காத்திருக்கும் மக்கள்.இது இவ்வாறு இருக்க தாம் காட்டிக் கொடுத்தவர் இல்லை நகை கள்ளர் இல்லை என்பதை தமிழ் மக்களுக்கு நிருபிக்க கௌரவ உறுப்பினர்கள் தயாரா? காத்திருக்கும் மக்கள்!! ஆதாரம் கீழே!