தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்த சகோதர இனத்தவர்! யார் இவர்? தமிழ் மக்களுக்கு இவர் செய்தது என்ன? புலம்பும் தமிழ் அரசியல் தலைமைகள்!!!

கடந்த சில காலமாக வடக்கின் வளம் அடையாளம் என வர்ணிக்கக்கூடிய பனை மர உற்பத்திகள் உலக அளவில் விற்பனை அதிகரித்துள்ளது இது யாவரும் அறிந்ததே!நாட்டிற்கு அதிக வருவாய் தற்போது இதன் ஊடாக கிடைக்கப்பெறுவதாகவும் வடமாகாணத்தில் பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் வாழ்வாதார நெருக்கடியில் உள்ள பல குடும்பங்களுக்கு பனை சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதி விற்பனை வாய்ப்பு என்பன அதிகரித்துள்ளமையால் பலர் இதன் ஊடாக நிரந்தர வருமானத்தை ஈட்டி வருவதாக அறிய முடிகிறது.

இது குறித்து வடமாகாணத்தில் இயங்கி வரும் பனை சார்ந்த உற்பத்திகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் கற்பகம் மற்றும் இவர்கள் சார்ந்த குழுக்களை சந்தித்த வேளை!

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டு தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதாக ஓர் சிங்கள சகோதரரை தமிழ் மக்கள் உணர்வின் வெளிப்பாடாக புகழாரம் சூட்டினார்கள்.யார் இவர்?

இவர் சாதித்தது என்ன என்று எமது செய்தியாளர் வினாவிய வினாவுக்கு மக்களின் பதில்!

தென்னை,கித்துள்,பனை மற்றும் இறப்பர்
செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை
பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சர்
கௌரவ அருந்திக்க பெர்னாண்டோ அவர்கள் எமக்கு தேடித்தந்த முத்து என பணை அபிவிருத்தி அதிகாரசபை தலைவர். கிரிசாந்த பத்திரஜா வை வர்ணித்த தமிழ் மக்கள் இவர் இந்த பதவி ஏற்ற காலம் முதல் இன்று வரை உலக நாடுகளுடன் நேரடியாக கதைத்து சந்தை வாய்ப்பை உருவாக்கியது மட்டும் இல்லாமல் புலம்பெயர் சமூகத்தை அடிக்கடி சந்தித்து எமது புலம்பெயர் மக்கள் ஊடாக விற்பனை திறனை அதிகரித்து புதிய புதிய உற்பத்தி குழுக்களை வடக்கு மக்களின் உற்பத்தி திறனை உயர்த்த உருவாக்கி இந்த உற்பத்திகளை நேரில் வந்து பார்வையிடுவது மட்டும் இல்லாமல் நேரடியாக வந்து இதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி எம்மை சொந்த காலில் கௌரவமாக நிற்க வைத்து மகான் இவர் என்றனர் .


எமது தமிழ் அரசியல் தலைமைகள் எம்மை பற்றி சிந்திக்காமல் கொழும்பில் தங்கி இருந்து விருந்துக்கு வருவது போல் அடுத்த தேர்தலுக்கு தான் வருவார்கள் ஆனால் இவர் எமது வெற்றியின் தூன் என பலரும் வாழ்த்தினர்

இவர்குறித்து எமது இணையத்தளத்தின் தேடுதலில் இவர் நாடு நாடாக பனை உற்பத்திகளை விற்பனை செய்ய அதற்கான வாய்ப்பை உருவாக்க தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உயர்த்த பாடுபடும் ஓர் சிறந்த தலைவர் என அறியப்படுகிறது.