தம்புள்ளையில் ஒன்று கூடிய 300 பிரான்ஸ் மங்கைகள் !

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் பல பிரான்ஸ் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியான Raid Amazones 2022 இன்று காலை சிகிரியா பொலத்தாவ கிராமத்தில் ஆரம்பமானது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளால் சுமார் 300 பிரான்ஸ் பெண்களின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொலத்தாவ கோவிலுக்கு அருகில் கூடியிருந்த 300 பிரான்ஸ் நாட்டுபெண்களில் சுமார் 240 பேர் காலை 6.30 மணியளவில் கிராமப்புறங்களில் சுமார் 16 கிலோமீட்டர் தூரம் நடக்க ஆரம்பித்தனர்.

பிரான்ஸ் சிறுமிகளை குழுக்களாகப் பிரித்து வேடிக்கையான முறையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்தக் குழு சிகிரியாவில் இருந்து வெவலவெவ வரை கால் நடையாக சென்றதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரான்சில் இருந்து சுமார் 300 யுவதிகள் இந்நிகழ்வில் பங்குபற்றறியதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.