தேசிய அரசாங்கம் பற்றி ரணில் பேச்சு.. அனைத்து கட்சிகளுக்கும் ஒன்றிணைய அழைப்பு!

நாட்டுக்கு தேசிய அரசாங்கம் தேவையில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன் மூலம் அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய கட்டமைப்பை உருவாக்கி மக்களின் நம்பிக்கையை பெற்று அதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

நிதி அமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொருளாதாரம் தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவுடனான எரிபொருளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தற்போது ஏழு எரிபொருள் கப்பல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிருலப்பனையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்