வவுனியாவில் தற்போது முகநூலில் பாராளுமன்ற உறுப்பினர் முதல் தொட்டு பொலிஸார் வரை ஊழல் மற்றும் குற்றங்கள் என விமர்சித்தது வரும் முகநூல் பிரபலம் என்று கூட சொல்ல முடியும் அவரே k.i.தீபன் இவரால் முன்வைக்கப்படும் குற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் என்ன? ஏன் இவர் இவ்வாறு செய்கிறார்? இவர் ஆதாரங்கள் உண்டு என பகிரங்கமாக சவால் விடுவது இவரின் கருத்தை ஏற்க தோன்றுகிறது என பலரும் கருத்தாடல் செய்யும் இந்த சந்தர்ப்பத்தில்
அரச அதிகாரிகள் யாரும் இவரால் முன்வைக்கப்படும் குற்றங்கள் உண்மையா? இவ்வாறு நடந்துள்ளதா? என ஆராய மறந்தது ஏன்? ஊடகங்கள் மௌனம் சாதிப்பது ஏன்? ஆராய்வதற்கு மாற்றீடாக இவர் கூறுவது போல் இவரை மிரட்டுவது ஏன்?
அவ்வாறு இவரை மிரட்டுவது உண்மைகளை மறைக்க என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் புதிய புதிய பிரச்சனைகளை ஆதாரங்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அவ்வாறு போலி ஆதாரங்கள் என குறிப்பிடும் நபர்கள் அல்லது திணைக்களங்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்? சம்மந்தப்பட்ட அதிகாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு!!