வவுனியா நகரசபை தலைவர் கௌதமன் அவர்கள் மீண்டும் தான் ஓர் மக்களுக்கான பிரதி நிதி என்பதை நிறுபித்துள்ளார் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு செயல்வடிவம் கொடுத்துள்ளார். மறைக்கப்படும் உண்மைகளை பறைசாத்தும் ஓர் உண்மையான ஊடகமாக நாம் செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே ! இந்த வகையில் கொவிட்19 காலப்பகுதியில் இடர்காலத்தை சாதகமாக பாவித்து பாரிய திட்டமிடலுடன் ஆதிவிநாயகர் ஆலயத்துக்கு மிக அருகாமையில் இருந்த மதுபான சாலை தீபற்றி எரிந்தமையை எமது இணையத்தளம் சந்தேகக் கண்ணுடன் ஓர் செய்தியை எதிர்வுகூறியிருந்தமை யாவரும் அறிந்ததே இதன் அடுத்தகட்டமாக மதுவரி திணைக்களத்தின் சட்ட திட்டத்துக்கு முரணாக ஆலயத்துக்கு அருகில் பிரமாண்டமான மதுபான சாலை கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்த வண்ணம் இருந்தது. இதை பொது அமைப்புக்கள் எதிர்த்தும் அதிகாரம் பணம் என்ற சக்திகளால் எந்த நடவடிக்கையும் கைகூட வில்லை இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச மற்றும் கௌரவ ஜனாதிபதி ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவனச அவர்களால் அவருடைய வன்னி இணைப்பு செயலாளர் மா.புஸ்பதேவா அவர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புக்கு அமைவாக இந்த விடயம் வடமாகாண விமல்அணியின் முக்கியஸ்தர்களால் நகர சபை தலைவரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டது இதற்கு அமைவாக விரைந்து செயற்பட்ட நகரசபை தலைவர் அவருக்குரிய அதிகாரங்களுக்கு அமைவாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.இது குறித்து புஸ்பதேவா அவர்கள் எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையில் அரச சட்டதிட்டத்துக்கு அமைவாக முறையான அனுமதியுடன் அவர்கள் நடவடிக்கைகளை தொடர எந்த தடையும் இல்லை என்றார்.