நான் ஒரு சிங்கள இனத்தவராக இருந்தாலும் ஊழல் அற்ற அரச கட்டமைப்பை வடமாகாணத்தில் நிலை நாட்டுவேன்… வடமாகாண பிரதம செயலாளர்

மக்களுக்கு கடமையாற்றும் போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு மாகாண பிரதம செயலாளராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நான் வவுனியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக அரச அதிபராக கடமை யாற்றியிருந்தேன் வவுனியாவை பொறுத்தவரை தமிழ் சிங்கள இனத்தைச்சேர்ந்த அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மக்கள் வசித்து வருகின்றார்கள்.

அவ்வாறான பிரதேசத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நான் கடமையாற்றி இருந்தேன் எனவே நான் ஒரு சிங்களவனாக இருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் கடமையாற்றுவதில் எந்தவித இடையூறும் இருக்காது என நான் கருதுகின்றேன்.எனத் தெரிவித்தார் இது குறித்து கருத்து தெரிவித்த சமுக ஆர்வலர்கள் சிலர் சிறந்த அதிகாரி என்பதற்கு வரைவிலக்கணம் சமன்பந்துலசேன அவர்கள் என்றும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாத ஒரு அரச அதிகாரி என்பதில் மாற்று இல்லை என்றும் இவரின் காலத்தில் வடமாகாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஊழல் அற்ற அரச கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.