பகவத் கீதை கூறும் அற்புதங்கள்!

நேற்றைய பொழுதும் நிஜமில்லை. நாளைய பொழுதும் நிச்சயமில்லை. இன்றையது மட்டுமே உண்மையான உண்மையாகும்.

நீங்கள் விரும்புவது உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும் , துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

பெரும் சாதனைகள் யாவும் வலிமையினால் மட்டும் செய்யப்பட்டவை அல்ல விடாமுயற்சியினால் தான்.

எதை இழந்தீர்கள் என்பது இப்போது முக்கியமில்லை. என்ன மிகுதியாய் இருக்கிறது என்பதே முக்கியம்